தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் திறப்பு 
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் மழலையர் பள்ளிகளை திறந்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் பெரும்பாலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

DIN

தமிழகத்தில் மழலையர் பள்ளிகளை திறந்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் பெரும்பாலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகளுக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. 

அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நா்சரி, விளையாட்டுப் பள்ளிகள், மழலையா் காப்பகங்கள், தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றில் நடத்தப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னை புத்தகக் காட்சி இன்றுமுதல் தொடங்கவுள்ள நிலையில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

SCROLL FOR NEXT