முகப்பு
தமிழ்நாடு

குள்ளப்பகவுண்டன்பட்டியில் பெண்ணைக் கொன்று வீட்டில் புதைப்பு: உறவினர்கள் மறியல்

தேனி மாவட்டம் குள்ளப்பகவுண்டன்பட்டியில் பெண்ணை கொலை செய்து புதைத்த குற்றவாளிகளை கைது நடவடிக்கை கோரி உறவினர்கள் காவல்துறையினரை புதன்கிழமை  முற்றுகையிட்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:25 AM
பகிர்:

தேனி மாவட்டம் குள்ளப்பகவுண்டன்பட்டியில் பெண்ணை கொலை செய்து புதைத்த குற்றவாளிகளை கைது நடவடிக்கை கோரி உறவினர்கள் காவல்துறையினரை புதன்கிழமை  முற்றுகையிட்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது குள்ளப்பகவுண்டன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன், இவரது மகள் முத்துப்பேச்சி(40), இவரது பெற்றோர் இறந்துவிட்டனர். முத்துப்பேச்சி தனது சகோதரி பொன்னுத்தாயுடன் தனித்தனியாக வசித்து வந்தார்.

கால் ஊனமான முத்துப்பேச்சி  திருமணமாகாதவர் கேரளாவுக்கு ஏலக்காய் தோட்டத்திற்கு கூலி வேலைக்குச் சென்று வந்தார். கடந்த திங்கள்கிழமை ராயப்பன்பட்டி உள்ள இவரது உறவினர் வீட்டுக்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு உறவினர்களுடன் முத்துப்பேச்சி சென்றார். திரும்ப மாலையில் வீட்டுக்கு வந்தவர் வீட்டில் அரிசி புடைத்துக் கொண்டிருந்தார். அதன்பிறகு முத்துப்பேச்சியை காணவில்லை, முத்துப்பேச்சியின் உறவினர்கள் அவரை இரவு முழுதும் தேடியும் காணாததால் செவ்வாய்க்கிழமை கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் கூடலூர் தெற்கு காவல்துறையினர் முத்துப்பேச்சி வீட்டிற்கு வந்து விசாரணை செய்து, திரும்பிச் சென்றனர். புதன்கிழமை மீண்டும் முத்துப்பேச்சியின் வீட்டிற்குச் சென்றனர், அருகில் மனோஜ் என்பவருக்கும் முத்துப்பேச்சிக்கும் அடிக்கடி தகராறு வருமாம், இதனால் மனோஜ் வீட்டுக்குச் சென்றனர். அப்போது மனோஜ் வீட்டில் காலி மதுபாட்டில்கள் இருந்தது, டி.வி.பெட்டிக்கு அருகே முத்துப்பேச்சி செருப்பு கிடந்தது. மேலும் அருகே புதியதாக மண் மேவி இருந்தது. மண் மேவி கிடந்த இடத்தை உறவினர்கள் பார்த்து, மண்ணை தோண்டினர்.

உடனே பரபரப்பு ஏற்பட்டது, இதுபற்றி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.  உத்தம பாளையம் ஏ.எஸ்.பி. ஸ்ரேயா குப்தா விசாரணை நடத்தினார். துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. முத்தம்பாளையம் ஆட்சியர் முன்னிலையில் குழியைத் தோண்டி விசாரணை நடத்த உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.