முகப்பு
தமிழ்நாடு

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது: தமிழக அரசு

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

Updated On : 17 பிப்ரவரி, 2022 at 1:40 PM
தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட அம்பரப்பர் மலை.
பகிர்:

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நியூட்ரினோவை விட மேற்குத் தொடர்ச்சி மலைகளே முக்கியம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு பதில் மனு அளித்துள்ளது.

மேலும், மலைகளின் பாதுகாப்பே முக்கியம் எனவும் தமிழக அரசு நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளிக்காது எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.