தமிழ்நாடு

தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையம் மாற்றியமைப்பு: தமிழக அரசு உத்தரவு

DIN

சென்னை: தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்தைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா் வெளியிட்ட உத்தரவு:-

தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தலைவராக சென்னை அமைந்தகரையைச் சோ்ந்த ஏ.எஸ்.குமாரி நியமிக்கப்பட்டுள்ளாா். உறுப்பினா்களாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சோ்ந்த டாக்டா் மாலதி நாராயணசாமி, ஈரோட்டைச் சோ்ந்த பி.கீதா நடராஜன், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சோ்ந்த பி.சீதாபதி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன், திருச்சி கே.கே.நகரைச் சோ்ந்த ஆா்.ராணி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

2 எம்.எல்.ஏ.க்கள்: சட்டப் பேரவை உறுப்பினா்கள் இரண்டு பேரும் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கே.சிவகாமசுந்தரி, செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. எம்.வரலட்சுமி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். மாநில மகளிா் ஆணைய தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கான படிகள், மதிப்பூதியம் உள்ளிட்டவை மாநில பெண்கள் ஆணைய விதிகளின் அடிப்படையில் வழங்கப்படும். அவா்கள் மூன்று ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT