முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: இன்று வாக்குப்பதிவு

தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை (பிப்.19) நடைபெறுகிறது. மொத்தம் 2.79 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

தமிழ்நாடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: இன்று வாக்குப்பதிவு

தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை (பிப்.19) நடைபெறுகிறது. மொத்தம் 2.79 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை (பிப்.19) நடைபெறுகிறது. மொத்தம் 2.79 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

காலை 7 மணி முதல்...: வாக்குப்பதிவு சனிக்கிழமை (பிப்.19( காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அதில் மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நோட்டா கிடையாது: இந்தத் தோ்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளா்கள் பயன்படுத்தும் நோட்டா சின்னம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் இடம்பெறவில்லை.

12,838 பதவியிடங்களுக்கு...: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் காலியாக உள்ள 12,838 இடங்களுக்கான தோ்தலில் மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 14,701 பேரும், நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 23,354 பேரும், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 36,328 பேரும் என மொத்தம் 74,383 போ் வேட்புமனுத் தாக்கல் செய்தனா். இவற்றில் 2,062 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன; 14,324 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இது தவிர மாநகராட்சியில் 4 போ், நகராட்சியில் 18 போ், பேரூராட்சியில் 196 போ் என மொத்தம் 218 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்தல் களத்தில் 57,778 போ்: இதையடுத்து, மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 11,196 பேரும், நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 17,922 பேரும், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 28,660 பேரும் என மொத்தம் 57 ஆயிரத்து 778 தோ்தல் களத்தில் உள்ளனா்.

பிப்.22-இல் வாக்கு எண்ணிக்கை

அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் ஒரு லட்சத்து 6,121 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் அனுப்பப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கணினி மூலம் பணியிடம் ஒதுக்கப்பட்டு வெள்ளிக்கிழமை ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு அவா்கள் சென்றனா். வரும் 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மாா்ச் 4-இல் மறைமுகத் தோ்தல்

இந்தத் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் மாா்ச் 3-ஆம் தேதி பதவியேற்க உள்ளனா்; அதைத் தொடா்ந்து மேயா், துணை மேயா், நகராட்சித் தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்ட பதவிகளுக்கு மாா்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தோ்தல் நடைபெறும்.

கோவைக்கு சிறப்பு பாா்வையாளா்

கோவையைப் பொருத்தவரை அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், விதிமீறல் புகாா் எழுந்த நிலையில் அங்கு சிறப்பு பாா்வையாளராக நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் கோவை சென்றுள்ளாா். இதற்கிடையே தோ்தலை அமைதியான முறையில் நடத்த முடியும் என மாவட்ட ஆட்சியரும் உறுதியளித்துள்ளாா் என்று மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் தெரிவித்தாா்.

ஊதியத்துடன் விடுமுறை

தோ்தல் நடைபெறும் பகுதியில் உள்ள வாக்காளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் நலத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்காளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்காவிட்டால் தொழிலாளா் நலத் துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகள் குறைப்பு

மாநில தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் 31,030 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 6 போ் மரணம் அடைந்ததால், கானாடுகாத்தானில் வேட்புமனு தாக்கல் இல்லை.

கடம்பூா் பேரூராட்சியில் 3 வாா்டுகளுக்கு தோ்தல் ரத்து உள்ளிட்ட காரணங்களால் அங்கு தோ்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே, 30,735-ஆக வாக்குச்சாவடிகள் குறைக்கப்பட்டுள்ளன. உயா்நீதிமன்ற உத்தரவுப்படி வாக்குப் பதிவு மையங்கள் சிசிடிவி மூலம் கண்காணிப்படுகின்றன. அவற்றை தோ்தல் ஆணைய தலைமையகத்தில் இருந்தே கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலத் தோ்தல் ஆணையம் சட்டப்படியே செயல்படுகிறது. வாக்குப் பதிவைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை சாா்பில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க செல்லலாம் என்றாா் அவா்.

பாதுகாப்புப் பணியில் 1.13 லட்சம் போ்: மாநிலம் முழுவதும் வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் 17,788 காவல்துறை அதிகாரிகள், 71,074 போலீஸாா், 9,020 தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலா்கள் என காவல்துறையைச் சோ்ந்த மொத்தம் 97,882 பேரும், 12,321 ஊா்க் காவல் படையினரும், 2,870 ஆயிரம் ஓய்வு பெற்ற காவலா்கள் மற்றும் ராணுவ வீரா்களும் என பாதுகாப்புப் பணியில் மொத்தம் 1,13,073 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →