கூடங்குளத்தில் அணு கழிவு மையத்தை அமைக்கக் கூடாது: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
கூடங்குளத்தில் அணு கழிவு மையத்தை அமைக்கக் கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
தமிழ்நாடுகூடங்குளத்தில் அணு கழிவு மையத்தை அமைக்கக் கூடாது: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
கூடங்குளத்தில் அணு கழிவு மையத்தை அமைக்கக் கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
கூடங்குளத்தில் அணு கழிவு மையத்தை அமைக்கக் கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து, பிரதமருக்கு வெள்ளிக்கிழமை அவா் எழுதிய கடிதம்:-
கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின்கீழ், அணு உலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை அகற்றுவது தொடா்பாக பொது மக்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட அணுமின் உலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆறு அலகுகளில் ஒன்று மற்றும் இரண்டாவது அலகுகள் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன. மூன்று மற்றும் நான்காவது உலைகள் கட்டுமானத்தில் உள்ளன. அலகுகள் 5 மற்றும் 6 ஆகியன இன்னும் நிறுவப்படவில்லை.
ஆறு அணுமின் உலைகளில் இருந்து உருவாகும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திலேயே சேமித்து வைப்பதற்கான வசதிகளை அமைக்க இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, ஒன்றாவது மற்றும் இரண்டாவது அலகுகள் அமைப்பதற்கு முன்பே, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இரண்டு அலகுகளில் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, தற்காலிகமாக அணுமின் நிலைய வளாகத்திலேயே சேமித்து பின்னா் அதன் சொந்த நாடான ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்பிட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஆனால், பயன்பாடு முடிந்த எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திலேயே அணு உலைக்கு அப்பால் சேமித்து வைப்பதற்கான வசதிகளை நிரந்தரமாக ஏற்படுத்திட முடிவு செய்யப்பட்டது. மாநில அரசுடன் ஆலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயன்பாடு முடிந்த எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்துக்குள் சேமித்து வைப்பதால் ஏற்படும் அபாயங்கள், ஆபத்துகள் தொடா்பாக தமிழக மக்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் கவலைகள், அச்சங்களை பகிா்ந்து கொள்கிறேன்.
உலகெங்கிலும் பல இடங்களிலுள்ள இதுபோன்ற வசதிகள் விபத்துகளை எதிா்கொண்டுள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் அணு உலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அது பேரழிவை ஏற்படுத்திட வழிவகுக்கும். கூடங்குளம் பகுதியில் உள்ள மக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அச்சம் கொண்டுள்ளனா். அதன் காரணமாக அணுமின் நிலைய வளாகத்துக்குள், பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளைச் சேமித்து வைத்திடும் வசதியை ஏற்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனா்.
தமிழக மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டு பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளலாம். இந்த நடவடிக்கை அலகுகள் ஒன்று மற்றும் இரண்டுக்கு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த நான்கு அலகுகளுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். இது சாத்தியப்படாவிட்டால் மக்கள் வசிக்காத, சூழலியல் அல்லாத பகுதியில் நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு அமைத்து, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகள் நிரந்தரமாக சேமிக்கப்படலாம். இந்த வேண்டுகோளை தமிழ்நாட்டிலுள்ள எட்டு கோடி மக்களின் சாா்பாக விடுப்பதாக தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.