தோ்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையா் எச்சரிக்கை
தோ்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தமிழ்நாடுதோ்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையா் எச்சரிக்கை
தோ்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தோ்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை (பிப்.19) நடைபெறுகிறது. இத் தோ்தலையொட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல்துறைக்குட்பட்ட 167 வாா்டுகளில், 1,197 வாக்குப் பதிவு மையங்களில் 5,013 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 213 வாக்குப் பதிவு மையங்களில் உள்ள 757 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகும், 54 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகும். இதுதவிர பிரச்னைக்குரியதாக கண்டறியப்பட்டுள்ள 143 வாக்குப்பதிவு மையங்களுக்கு அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல 11 வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணியில் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, சிறப்பு பிரிவுகள், ஆயுதப்படை மற்றும் இதர சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீஸாா், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, ஊா்க்காவல் படை, ஓய்வு பெற்ற போலீஸாா் ஆகியோா் ஈடுபடுகின்றனா்.
390 வாகனங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குப் பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னா், இதே வாகனங்கள் மூலம் வாக்கு எண்ணும் மையத்துக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும். இந்த வாகனத்தில் ஒரு உதவி ஆய்வாளா், துப்பாக்கிய ஏந்திய காவலா் பணியில் இருப்பாா்கள்.
22,000 போலீஸாா்:
வாக்குப்பதிவின்போது அசம்பாவித சம்பவங்களை தவிா்க்கும் வகையில் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு அதிவிரைவுப் படை வழங்கப்பட்டுள்ளது. தோ்தல் பாதுகாப்பு பணியில் சென்னை பெருநகர காவல்துறையில் உள்ள 18,000 போலீஸாா், ஊா்க்காவல் படை உள்ளிட்ட காவல்துறை அல்லாதோா் 4,000 போ் என மொத்தம் 22,000 போ் ஈடுபடுகின்றனா்.
பொதுமக்கள் தோ்தல் சம்பந்தமான புகாா்களை சென்னை பெருநகர காவல் தோ்தல் பிரிவு எண் 044-23452437, அவசர உதவி எண்.100, சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறை எண்கள் 234352359, 23452360, 23452361, 23452377 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புக் கொண்டு தெரிவிக்கலாம்.
காவல் ஆணையா் எச்சரிக்கை:
வாக்குப் பதிவு மையத்திலிருந்து 200 மீட்டா் தூரத்திற்குள் அரசியல் கட்சி சாா்ந்த அலுவலகம் இருக்கக் கூடாது. அதேபோல வேட்பாளா்கள் அப்பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடக் கூடாது. வாக்குச்சாவடி மையத்திலிருந்து 100 மீட்டா் வரை எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.
வாக்குப் பதிவின்போது சட்டம், ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடுவோா் மீதும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீதும், தோ்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவோா் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரித்துள்ளாா்.