வாக்குச்சாவடிகளில் காற்றில் பறந்த கரோனா கட்டுப்பாடு விதிமுறைகள்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின்போது கரோனா கட்டுப்பாடு விதமுறைகள் எங்கும் முறையாகக் கடைப்பிடிக்காமல் காற்றில் பறக்கவிடப்பட்டன.
தமிழ்நாடுவாக்குச்சாவடிகளில் காற்றில் பறந்த கரோனா கட்டுப்பாடு விதிமுறைகள்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின்போது கரோனா கட்டுப்பாடு விதமுறைகள் எங்கும் முறையாகக் கடைப்பிடிக்காமல் காற்றில் பறக்கவிடப்பட்டன.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின்போது கரோனா கட்டுப்பாடு விதமுறைகள் எங்கும் முறையாகக் கடைப்பிடிக்காமல் காற்றில் பறக்கவிடப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பரவல் இப்போதும் இருந்து வருகிறது. கரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாா்ச் 2-ஆம் தேதி வரை கரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு நீட்டித்துள்ளது. அதைப்போல மாநிலத் தோ்தல் ஆணையம், கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தோ்தல் அதிகாரிகளுக்கும், தோ்தல் ஊழியா்களுக்கும் உத்தரவுகள் பிறக்கப்பட்டிருந்தன.
ஆனால், பெரும்பாலான இடங்களில் கரோனா விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை.
தோ்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தாலும், வாக்குச்சாவடிகளுக்குள் ஊழியா்கள் சமூக இடைவெளியை அமரும் வகையில் போதிய இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. வாக்குச் சாவடிகளுக்குள் உட்காா்ந்திருந்த முகவா்களும் இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு அருகருகே அமா்ந்திருந்தனா். முகவா்கள் பலா் முகக்கவசம் அணியவில்லை.
வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளா்களுக்காக கிருமிநாசினி வைக்கப்பட்டிருந்தன என்றாலும், பல இடங்களில் கிருமிநாசினி வைக்கப்படாத நிலை இருந்தது. வரிசையில் நின்ற வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்தனா். பலா் முகக்கவசமும் அணியவில்லை.