முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

ஹிஜாபை அகற்றக் கூறிய பாஜக வாக்குச் சாவடி முகவர்: மதுரையில் பதற்றம் (விடியோ)

மதுரை மேலூர் நகராட்சியில் வாக்காளர் பட்டியலில் புகைப்படத்தை சரிபார்க்க முஸ்லிம் பெண்ணின் ஹிஜாப் மற்றும் முகக் கவசத்தை பாஜக வாக்குச் சாவடி முகவர் அகற்றக் கூறியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
கோப்புப்படம்
பகிர்:

மதுரை மேலூர் நகராட்சியின் 8-வது வார்டில் வாக்காளர் பட்டியலில் புகைப்படத்தை சரிபார்க்க முஸ்லிம் பெண்ணின் ஹிஜாப் மற்றும் முகக் கவசத்தை பாஜக வாக்குச் சாவடி முகவர் அகற்றக் கூறியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

"மேலூர் நகராட்சியிலுள்ள அல்-அமீன் உயர்நிலைப் பள்ளியில் வாக்களிக்க முஸ்லிம் பெண்கள் முகக் கவசங்களுடன் பர்தாவும் அணிந்து வந்தனர்.

பாஜக வாக்குச் சாவடி முகவர் கிரிராஜ் என்பவர், முஸ்லிம் பெண் ஒருவரிடம் வாக்காளர் பட்டியலிலுள்ள புகைப்படத்தை சரிபார்க்க முகக் கவசம் மற்றும் ஹிஜாபை அகற்றக் கூறியிருக்கிறார். ஹிஜாப் அணிந்திருப்பதால், புகைப்படத்தை சரிபார்க்க முடியவில்லை என்ற அவர் இதன் நீட்சியாக 'கள்ள ஓட்டு' பதிவாகக்கூடும் என்றும் கூறியிருக்கிறார்.

இதனிடையே வாக்குச் சாவடி அதிகாரிகள், திமுக, அதிமுக மற்றும் மற்ற கட்சி வாக்குச் சாவடி முகவர்கள் இதில் தலையிட்டு வேறு வாக்குச் சாவடி முகவரை மாற்றுமாறு பாஜகவைக் கேட்டுக்கொண்டனர். இதனால், வாக்குப் பதிவு 15 நிமிடங்கள் தடைபட்டது. இதையடுத்து, பாஜக வாக்குச் சாவடி முகவர் மாற்றப்பட்டு வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கியது." 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 47.18% வாக்குகள் பதிவாகியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →