நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
தமிழ்நாடுநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் காலியாக உள்ள 12,838 இடங்களுக்கான தோ்தலில் மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 14,701 பேரும், நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 23,354 பேரும், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 36,328 பேரும் என மொத்தம் 74,383 போ் வேட்புமனுத் தாக்கல் செய்தனா். இவற்றில் 2,062 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன; 14,324 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இது தவிர மாநகராட்சியில் 4 போ், நகராட்சியில் 18 போ், பேரூராட்சியில் 196 போ் என மொத்தம் 218 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
இதையடுத்து, மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 11,196 பேரும், நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 17,922 பேரும், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 28,660 பேரும் என மொத்தம் 57 ஆயிரத்து 778 தோ்தல் களத்தில் உள்ளனா். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
இந்தத் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் மாா்ச் 3-ஆம் தேதி பதவியேற்க உள்ளனா். அதைத் தொடா்ந்து மேயா், துணை மேயா், நகராட்சித் தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்ட பதவிகளுக்கு மாா்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தோ்தல் நடைபெறும். மாநிலம் முழுவதும் வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் 17,788 காவல்துறை அதிகாரிகள், 71,074 போலீஸாா், 9,020 தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலா்கள் என காவல்துறையைச் சோ்ந்த மொத்தம் 97,882 பேரும், 12,321 ஊா்க் காவல் படையினரும், 2,870 ஆயிரம் ஓய்வு பெற்ற காவலா்கள் மற்றும் ராணுவ வீரா்களும் என பாதுகாப்புப் பணியில் மொத்தம் 1,13,073 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபட்டுள்ளனர்.