வாக்கு எண்ணிக்கையின்போது கூடுதல் சிசிடிவி அமைக்க அதிமுக கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது கூடுதல் சிசிடிவி கேமிராக்களை அமைக்க அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது கூடுதல் சிசிடிவி கேமிராக்களை அமைக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர்கள் மாவட்டத் தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணாவை திங்கள்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
வாக்கு எண்ணிக்கையை விரைவாக நடத்தி தாமதமின்றி வெற்றிச் சான்றிதழ்களை வழங்க வேண்டும். அதிமுக வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இந்தக் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ளார். மனுவின் நகல்களை மாநிலத் தேர்தல் ஆணையர், மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.