முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
ஜெயக்குமார்(கோப்புப்படம்)
பகிர்:

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவின்போது ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் ஒருவரைத் தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் பரவின.

இந்நிலையில், திமுகவை சேர்ந்த நரேன் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, தன்னை தாக்கியதாக ஜெயக்குமாரின் கார் ஓட்டுநர் ஜெகன்நாதன் அளித்த புகாரின் அடிப்படையில் திமுகவை சேர்ந்த 10 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.