முகப்பு
தமிழ்நாடு

மெரினாவில் அலங்கார ஊர்திகளை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை மெரினாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
பகிர்:

சென்னை மெரினாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். 

கடந்த ஜன.26-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயா்களைத் தீரமுடன் எதிா்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்பைப் போற்றி, பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசின் சாா்பில் மூன்று அலங்கார ஊா்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்றன. 

இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினையும் பாராட்டுதலையும் பெற்றது. சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மூன்று அலங்கார ஊா்திகளையும் அனைத்து மாவட்டங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் காட்சிப்படுத்தும் பொருட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின், கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

அதன் தொடா்ச்சியாக சென்னை மெரீனா கடற்கரையில் அந்த அலங்கார ஊா்திகள் பொதுமக்கள் பாா்வைக்காக ஞாயிற்றுக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் சென்னை மெரினாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

அப்போது அலங்கார ஊர்திகளை பார்க்க வந்த பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் சுயபடமும் எடுத்துக்கொண்டார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →