வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் நகர்மன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, ஒற்றை ஆளாய் களத்தில் நின்றவர் 95 வாக்குகள் கூடுதல் வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.
வேதாரண்யம் நகர்மன்றத் தேர்தலில் 13 ஆவது வார்டில் சுயேச்சையாக களம் கண்டவர் சிவ.மயில்வாகனன். நண்பர்கள் உதவியோடு, மிதிவண்டியில் ஒலிபெருக்கையை வைத்துக்கொண்டு பிரசாரம் செய்தார்.
இவரை எதிர்த்து அதிமுக, காங்கிரஸ் மற்றும் அரசியல் கட்சிகளின் போட்டி வேட்பாளர்கள் களம் கண்டனர்.
இதில், சிவ.மயில்வாகனன் 95 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.