முகப்பு
தமிழ்நாடு

நீடாமங்கலம், வலங்கைமான், கொரடாச்சேரி பேரூராட்சிகளைக் கைப்பற்றிய திமுக கூட்டணி

நீடாமங்கலம், வலங்கைமான், கொரடாச்சேரி ஆகிய பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.

தமிழ்நாடு

நீடாமங்கலம், வலங்கைமான், கொரடாச்சேரி பேரூராட்சிகளைக் கைப்பற்றிய திமுக கூட்டணி

நீடாமங்கலம், வலங்கைமான், கொரடாச்சேரி ஆகிய பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
பகிர்:

நீடாமங்கலம், வலங்கைமான், கொரடாச்சேரி ஆகிய பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி பொறியியல் கல்லூரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடந்தது. மூன்று பேரூராட்சிகளின் வாக்குப் பெட்டிகளும் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன.

நீடாமங்கலம் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 7 வார்டுகளில் திமுகவும், 7 வார்டுகளில் அதிமுகவும், ஒருவார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் திமுக பேரூராட்சியை கைப்பற்றுகிறது.

அதுபோன்று வலங்கைமான் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 11 இடங்களையும் அதிமுக-3 இடங்களையும் காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது. இங்கும் பேரூராட்சி தலைமையை திமுக பிடித்துள்ளது.

கொரடாச்சேரி பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 11 இடங்களையும், அதிமுக 3 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும் பிடித்துள்ளது. கொரடாச்சேரி பேரூராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →