ஈரோடு: 10ல் 9 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது
ஈரோடு மாவட்டத்தில் 10ல் 9 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.
தமிழ்நாடுஈரோடு: 10ல் 9 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது
ஈரோடு மாவட்டத்தில் 10ல் 9 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 10ல் 9 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகள் உள்ளன. பகல் 12 மணி வரை 10 பேரூராட்சிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 9 பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட பேரூராட்சிகள் விவரம்:
அறச்சலூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 11 வார்டுகளில் வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றியது.
ஊஞ்சலூர் பேரூராட்சியில் 12 வார்டுகளில் 6 வார்டுகளை திமுக கைப்பற்றியது.
நம்பியூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 9 வார்டுகளை திமுகவும், 3 வார்டுகளை காங்கிரசும் கைப்பற்றின. இங்கு அதிமுக 2, பா.ஜனதா 1 இடத்தையும் பிடித்தன.
பாசூர் பேரூராட்சியில் 12 வார்டுகளில் 8 வார்டுகளை திமுகவும் காங்கிரஸ் ஒரு இடத்தையும் பிடித்தன.
பெரிய கொடிவேரி 15 வார்டுகளில் திமுக 12 வார்டுகளையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் பிடித்தன. அதிமுக 2 வார்டுகளை பிடித்தது.
லக்கம்பட்டி பேரூராட்சியில் அதிமுக 12 இடங்களையும், திமுக 3 இடங்களையும் பிடித்தன.
பவானிசாகர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 13, இந்திய கம்யூனிஸ்டு ஒரு வார்டையும் சுயேச்சை ஒரு இடத்தையும் கைப்பற்றின.
கருமாண்டிசெல்லிபாளையம் பாளையத்தில் 18 வார்டுகளில் திமுக 10 வார்டுகளை கைப்பற்றியது. அதிமுக 4 வார்டுகளையும், சுயேச்சை 3 வார்டுகளையும் பா.ஜனதா ஒரு இடத்தையும் கைப்பற்றின.
பெருந்துறை 15 வார்டுகளில் திமுக 10 வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு இடத்தையும், அ.திமுக 4 வார்டுகளையும் பிடித்தன.
அந்தியூர் 18 வார்டுகளில் திமுக 13 இடங்களை பிடித்தது. அதிமுக 2 வார்டுகளையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும், இந்திய கம்யூனிஸ்டு ஒரு இடம் மற்றும் ஒரு இடத்தை சுயேச்சையும் கைப்பற்றின.