தமிழ்நாடு

பெரும் வெற்றி, திமுக அணி வசம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்

DIN

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாநிலத்திலுள்ள சென்னை உள்பட அனைத்து 21 மாநகராட்சிகளிலும்  தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்றுக் கைப்பற்றியிருக்கிறது.

மேலும், 138 நகராட்சிகளில் தி.மு.க. 132 நகராட்சிகளிலும் அதிமுக 3 நகராட்சிகளிலும் மற்றவற்றைப் பிற கட்சிகளும் கைப்பற்றியுள்ளன.

பேரூராட்சிகளிலும் பெரும்பாலானவற்றைத் திமுக அணியினரே கைப்பற்றியுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெருமளவிலான தொகுதிகளில் வெற்றி பெற்ற கொங்கு மண்டலப் பகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்விகளைச் சந்தித்துள்ளது. இந்தப் பகுதிகளிலும் திமுக அணியினரே பெரும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்ற மன்ற உறுப்பினர்கள் கூடி, மாநகர மேயர்கள், நகர்மன்றத் தலைவர்கள் போன்ற தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT