திருவள்ளூர் : திமுக 3, சுயேச்சை 2, அதிமுக 1 இடங்களில் வெற்றி 
தமிழ்நாடு

திருவள்ளூர் : திமுக 3, சுயேச்சை 2, அதிமுக 1 இடங்களில் வெற்றி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022-ல் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் 158 பேர் போட்டியிட்டனர்.

DIN

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022-ல் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் 158 பேர் போட்டியிட்டனர். அதற்கான வாக்கு எண்ணும் மையம் திருப்பாச்சூர் திருமுருகன் கல்லூரியில் 8 மணியளவில் 1 வார்டு முதல் 6வது வார்டு வரை தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது.

1 வார்டில் மொத்த 1530 ஓட்டுகள் பதிவாகியது.  இதில் உதயசூரியன் சின்னத்தில் வசந்தி 980 வாக்குகளும் இரட்டை இலை சின்னத்தில் மஞ்சுளா 554 வாக்குகளும் பெற்று 426 வாக்கு வித்தியாசத்தில் உதயசூரியன் போட்டியிட்ட வசந்தி வெற்றி பெற்ளார்.

2 வது வார்டில் மொத்த 1658 வாக்குகள் பதிவானது . இதில் உதயசூரியன் சின்னத்தில் உதயம் மலர் 856 வாக்குகளும் இரட்டை இலைச் சின்னத்தில் ராகினி 798 வாக்குகளும் பெற்று 58 வாக்கு வித்தியாசத்தில் உதயசூரியன் சின்னத்தில் உதயம் மலர் வெற்றி பெற்றார் 

3வது வார்டில் மொத்தம் 1175 வாக்குகள் பதிவானது. இதில் இரட்டை இலைச் சின்னத்தில் சுமித்ரா 594 வாக்குகளும் உதயசூரியன் சின்னத்தில் மஞ்சுளா 512 வாக்குகளும் பெற்று 82 வாக்கு வித்தியாசத்தில் இரட்டை இலை சின்னத்தில் சுமித்ரா வெற்றி பெற்றார்.

4வது வார்டில் 1496 பதிவான வாக்குகள்.  இதில் சுயேச்சை வேட்பாளர் நீலாவதி 517 வாக்குகளும் இரட்டை இலை சின்னத்தில் பிரியங்கா 427 வாக்குகள் பெற்று சுயேச்சை வேட்பாளர் நீலாவதி 90 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

5- வது மொத்த வார்டில் மொத்தம் 1301 வாக்குகள் பதிவானது. இதில் சுயேட்சை வேட்பாளர் அம்பிகா 578 வாக்குகளும் அமமுக  வேட்பாளர் வள்ளி 357 வாக்குகளும் பெற்று சுயேச்சை வேட்பாளர் அம்பிகா 221 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

6-வது மொத்த வார்டில் மொத்தம் 1818 வாக்குகள் பதிவானது. இதில் உதயசூரியன் சின்னத்தில் பிரபாகரன் 928 வாக்குகளும்  இரட்டை இலைச் சின்னத்தில் ராஜி 645 வாக்குகளும் பெற்று உதயசூரியன் சின்னத்தில் பிரபாகரன் 283 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதுவரை முடிவுகள் வெளியான 6 வார்டுகளில் மூன்று திமுகவும் இரண்டு சுயேட்சைகளும் ஒரு அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டுக்கல்லில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மூச்சுத்திணறல்: பிரசவித்த பெண் உயிரிழப்பு

ஏற்றத்தாழ்வு எண்ணம் இல்லாத பெருந்தலைவா் பெரியாா் ஈவெரா: அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்

நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

வாக்குச் சாவடிகளை பிரிப்பது குறித்து ஆலோசனை

SCROLL FOR NEXT