முகப்பு
தமிழ்நாடு

பூவந்தி அருகே நின்ற லாரி மீது பைக் மோதி ஆயுதப்படை காவலர் பலி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே வியாழக்கிழமை அதிகாலை நின்ற லாரி மீது பைக் மோதி உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் பலியானார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
கோப்புப்படம்
பகிர்:

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே வியாழக்கிழமை அதிகாலை நின்ற லாரி மீது பைக் மோதி உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் பலியானார். 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன்(34) இவர் சிவகங்கை ஆயுதப்படை பிரிவில் காவலராக வேலை பார்த்து வந்தார். தனது பைக்கில் சிவகங்கையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். பூவந்தி அருகே அரசனூர் சமத்துவபுரம் பகுதியில் சென்றபோது சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், பலத்த காயமடைந்த காவலர் அலெக்ஸ்பாண்டியன ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 

இந்த விபத்து சம்பவம் குறித்து பூவந்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.