மனிதநேயம் குறித்துப் பேசிய சிறுவனுக்கு முதல்வர் பாராட்டு
மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்துப் பேசிய பள்ளி மாணவன் அப்துல் கலாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
தமிழ்நாடுமனிதநேயம் குறித்துப் பேசிய சிறுவனுக்கு முதல்வர் பாராட்டு
மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்துப் பேசிய பள்ளி மாணவன் அப்துல் கலாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்துப் பேசிய பள்ளி மாணவன் அப்துல் கலாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் எனச் சிறுவன் அப்துல் கலாம் பேசிய காணொளிக் கண்டு நெகிழ்ந்தேன். நேரில் அழைத்துப் பாராட்டினேன்.
சாதி, மதப் பாகுபாடுகளைக் கற்பிக்காமல் சிறுவனின் மனதில் அன்பையும் மனிதநேயத்தையும் விதைத்த அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் பாராட்டுக்குரியர்' என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவன் அப்துல் கலாம், இணையதள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்த வேண்டும்; சாதி, மதம் கடந்து அன்பு செலுத்த வேண்டும்' என்று பேசியது இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.