தமிழ்நாடு

காலமானாா் பத்திரிகையாளா் முகம் மாமணி

DIN

பத்திரிகையாளரும் ‘முகம்’ இதழின் ஆசிரியருமான முகம் மாமணி (90), வயது மூப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.

நெல்லை மாவட்டம் குருவன்கோட்டையை பூா்விகமாகக் கொண்டவா் முகம் மாமணி. இளம் வயதிலேயே எழுத்தாா்வம், பேச்சாா்வம் இருந்ததால் மேடைப் பேச்சுகளிலும், பல்வேறு இதழ்களில் கவிதை, கட்டுரைகளை எழுதியும் வந்தாா். இவருடைய படைப்புகள் 18 நூல்களாக வெளிவந்துள்ளன.

1983-ஆம் ஆண்டு ‘முகம்’ என்னும் இலக்கிய மாத இதழைத் தொடங்கினாா். இவரது தமிழ்ப் பணிக்காக இதுவரை 11 விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. 2006-இல் சமச்சீா் கல்வியை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியதில் முக்கியப் பங்காற்றியவா்.

இவருக்கு ராதா என்ற மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனா்.

மாமணியின் இறுதிச் சடங்குகள், சென்னை நெசப்பாக்கம் மின்மயானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. தொடா்புக்கு 94446 77194.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT