முகப்பு
தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான 2 தேர்தல் வழக்குகள் தள்ளுபடி

திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரண்டு தேர்தல் வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரண்டு தேர்தல் வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 
தன் மீதான குற்ற வழக்கு விவரங்களை உதயநிதி முழுமைமையாக தெரிவிக்கவில்லை என மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 
அப்போது, வைப்புத்தொகை செலுத்தாமல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதி மறுத்த நீதிபதி தேர்தலை எதிர்த்த இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தற்போது, பிரேமலதா என்ற வாக்காளர் தொடர்ந்த வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →