தமிழ்நாடு

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களின் பயணச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு

DIN

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள், பணியாளர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது நேற்று போர் தொடுக்கத் தொடங்கியது. ரஷியா தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. 

உதவி கேட்டும் உக்ரைனுடன் போரிட உலக நாடுகள் முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் உக்ரைனில் கல்வி மற்றும் வேலைக்காகச் சென்ற பிற நாட்டினரும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

மத்திய அரசு சார்பிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், பணியாளர்களும் அங்கு சிக்கியுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. 

இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள், பணியாளர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT