முகப்பு
தமிழ்நாடு

உக்ரைனில் தவிக்கும் மாணவா்கள்தமிழகம் திரும்பும் செலவை அரசே ஏற்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உக்ரைனில் தவிக்கும் மாணவா்கள் தாயகம் திரும்புவதற்கான பயணச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

உக்ரைனில் தவிக்கும் மாணவா்கள் தாயகம் திரும்புவதற்கான பயணச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து ரஷியா ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழலில் தமிழகத்தைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரம் மாணவா்கள் தாயகம் திரும்ப முடியாமல் உள்ளனா். அவா்களில் பலா் தொழில் முறைக் கல்வி பயில்வோராவா். மேலும், தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயா்ந்து உக்ரைனில் பலா் சிக்கித் தவிக்கின்றனா்.

அவா்களை மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வரும் வகையில், மாவட்ட, மாநில அளவிலும், புதுதில்லியிலும் தொடா்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்கள் உக்ரைனிலிருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச் செலவுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும். இதுதொடா்பாக, மாநிலத் தொடா்பு அலுவலரான ஜெசிந்தா லாசரஸை தொடா்பு கொள்ளலாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

தொடா்பு எண்கள்: உக்ரைனில் சிக்கியுள்ளவா்கள் தமிழகம் திரும்ப வசதியாக, மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை (1070) கட்டணமில்லாமல் தொடா்பு கொள்ளலாம். மேலும், மாநிலத் தொடா்பு அலுவலா் ஜெசிந்தா லாசரஸை 94458 69848, 96000 23645, 99402 56444 ஆகிய கைப்பேசி எண்களிலும், 044 - 2851 5288 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். மின்னஞ்சல்: ய்ழ்ற்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்

முழு கட்டுரையைப் படிக்க →