தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு

DIN

தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கொலை வழக்கு மற்றும் சாலை மறியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதில், சாலை மறியல் வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் கொலை வழக்கில் சென்னைப் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  

தொடர்ந்து, சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர், ரூ. 5 கோடி மதிப்பிலான தன்னுடைய தொழிற்சாலையை அபகரித்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.

தொடர்ந்து, தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் இன்று சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வைஷ்ணவி மார்ச் 11-ம் தேதி வரை ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT