தமிழ்நாடு

கரோனா பயம்: காசிமேடு சந்தையில் மீன்கள் விற்பனை பாதிப்பு, விலை 20% உயர்வு 

DIN

சென்னை: சென்னையில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்பனை குறைந்துள்ளதால், இதனால் திங்கள்கிழமை மீன்களின் விற்பனை விலை 20 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. நிதி நெருக்கடி காரணமாக 50 சதவிகிதத்துக்கும் குறைவான விசைப்படகுகளே கடலுக்குச் செல்வதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மீன் வியபாரிகள் கூறியதாவது: 

"கரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு மீன்கள் விற்பனை பாதிக்கப்பட்டது. சமீபத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ​​வார இறுதி நாள்களில் கூட சில வாடிக்கையாளர்கள் மட்டுமே வந்து செல்கின்றனர். மறுபுறம், எங்களிடம் பராமரிப்புக்கு போதிய பணம் இல்லாததாலும், 50 சதவிகிதத்திற்கும் குறைவான டீசல் படகுகள் மட்டுமே கடலுக்குள் சென்று வருவதால் மீன்கள் வரத்து குறைந்துள்ளது. எனவே, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் மீன்கள் விலை 20 சதவிகிதம் உயர்த்துள்ளதாக” காசிமேடு மீன் சந்தையின் மீனவரும் மொத்த வியாபாரியுமான எம்.முகேஷ் கூறினார். 

வரும் நாள்களில் 30 சதவிகித டீசல் விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்கச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், கடல் உணவுகளின் வரத்து குறைந்து மேலும் 40 சதவிகிதம் குறையும் இதனால் மேலும் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"நாங்கள் இப்போது மீன்கள் விநியோகத்தில் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளோம், வரும் நாள்களில் அது வெகுவாகக் குறையும். மேலும், சம்பாதிக்கும் தொகையில் பாதிக்கும் மேல் பராமரிப்புக்காக, குறைந்தபட்சம் ஒரு லட்சத்துக்கு மேல் செலவழித்து வருகிறோம். எனவே, அடுத்த வாரம் முதல் சந்தையில் 40 - 45 சதவிகிதம் வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்கிறார் மற்றொரு மீனவர் எல்.ராஜேஷ்.

சந்தைக்கு சுமார் 10 டன் கடல் உணவுகள் மட்டுமே வரத்தாக உள்ளது. இதனால் வஞ்சிரம் கிலோ ரூ.600க்கும், சங்கரா  கிலோ ரூ.450க்கும், கருப்பு பாம்ஃப்ரெட் கிலோ ரூ.380க்கும், புலி இறால் ரூ.800க்கும், வெள்ளை இறால் ரூ.350க்கும் விற்பனையாகி வருகிறது. கணவாய் கிலோ ரூ.380க்கும், நண்டு கிலோ ரூ.320 முதல் 380 வரை விற்பனையாகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT