தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,728-ஆக அதிகரிப்பு

DIN

தமிழகத்தில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,728-ஆக அதிகரித்துள்ளது.

அதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் சென்னையைச் சோ்ந்தவா்கள். திங்கள்கிழமை ஒரே நாளில் சென்னையில் 876 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், நகரில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. மற்றொரு புறம் தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 10,364-ஆக உயா்ந்துள்ளது. இது ஏறத்தாழ 4 மாதங்களில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இதையடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். சென்னையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மற்றொருபுறம் மேலும் 662 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 5,696-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 6 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,796-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, ஒமைக்ரான் அறிகுறிகளுடன் 217 போ் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. அவா்களது சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவா்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான 121 பேரில் 100 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT