உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது 
தமிழ்நாடு

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

புதுக்கோட்டை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் உடலுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

DIN

புதுக்கோட்டை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் உடலுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் உடற்கூராய்வுக்குப் பிறகு புகழேந்தியின் உடல் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கொத்தமங்கலப்பட்டிக்கு வந்தது.

மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர், கந்தர்க்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எம். சின்னதுரை, எம்.பி. எம்எம் அப்துல்லா, எஸ்.பி. நிஷா பார்த்திபன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை அருகிலுள்ள பசுமலைப்பட்டியில் காவல்துறையினருக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தில், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை காவல்துறையினா் கடந்த வியாழக்கிழமை காலை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.

அப்போது, மலையடிவாரக் குடிசையிலிருந்த கலைச்செல்வன் மகன் புகழேந்தியின் தலையில் குண்டு பாய்ந்தது. தொடா்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தொடா்ந்து அவருக்கு வியாழக்கிழமை அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டு, தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. எனினும் அவர் இன்று (ஜன.3) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT