முகப்பு
தமிழ்நாடு

வாழப்பாடியில் 65 ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் போராட்டம்

வாழப்பாடியில் பொங்கல் தொகுப்பு டோக்கன் கூடுதலாக கேட்ட திமுகவைச் சேர்ந்த சிலர், கடை பணியாளர்களை அவதுாறாகப் பேசியதால், ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பொங்கல் தொகுப்பு டோக்கன் கூடுதலாக கேட்ட திமுகவைச் சேர்ந்த சிலர், கடை பணியாளர்களை அவதுாறாகப் பேசியதால், 65 ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் மணிக்கணக்கில் காத்திருந்த பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

வாழப்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட ரேஷன் கடை பணியாளர்களிடம், திமுகவைச் சேர்ந்த சிலர், தங்களிடம் கூடுதலாக டோக்கன் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி அவதுாறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பாகவும் இதே நபர்கள் பணியாளர்களை மிரட்டி வந்ததாக புகார் தெரிவித்த ரேஷன் கடை பணியாளர்கள், 65 ரேஷன் கடைகளையும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அடைத்து விட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது. 

ரேஷன் கடைகள் மூடப்பட்டதால், பொங்கல் தொகுப்பு பெறுவதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில், திமுக நிர்வாகி எனக் கூறிக் கொண்டு பணியாளர்களை அவதுாறாக பேசி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக, குறிப்பிட்ட சிலர் மீது ரேஷன்கடை பணியாளர்கள், வாழப்பாடி போலீஸில் புகார் செய்துள்ளனர். இது குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →