தமிழ்நாடு

கோவில்பட்டி கோட்டத்தில் 7.38  லட்சம் வாக்காளர்கள்

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான  இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

கோட்டாட்சியர் சங்கரநாராயணன்  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். 

அப்போது, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜ், வட்டாட்சியர்கள் அமுதா (கோவில்பட்டி), விமலா (விளாத்திகுளம்), நிஷாந்தினி (ஓட்டப்பிடாரம்), தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள் சுபா, வசந்த மல்லிகா ஆகியோர் உடனிருந்தனர்.

கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,30,987  ஆண்கள், 1,37,573  பெண்கள்,  30  திருநங்கைகள் என மொத்தம் 2,68,590  வாக்காளர்கள் உள்ளனர்.

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,05,846  ஆண்கள், 1,10,847 பெண்கள், 10  திருநங்கைகள் என மொத்தம் 2,16,703  வாக்காளர்கள் உள்ளனர்.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,23,696 ஆண்கள், 1,29,464  பெண்கள், 32 திருநங்கைகள் என மொத்தம் 2,53,192வாக்காளர்கள் உள்ளனர்.

கோவில்பட்டி கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 7,38,485 வாக்காளர்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT