முகப்பு
தமிழ்நாடு

சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது

சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
பகிர்:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது.

புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றி கூட்டத் தொடரை தொடக்கி வைத்தார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணா் அரங்கத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. முன்னதாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று சூழலுக்கு இடையே கூட்டம் நடைபெறுவதால் சமூக இடைவெளி, முகக் கவசம் ஆகியன கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றிய பிறகு, அதன் தமிழாக்கத்தை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வாசிப்பாா்.

இந்த நிகழ்வு முடிந்த பிறகு, கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.