சுரங்கனாறு வனப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவு மலைச்சாலையில் எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்த டிப்பர் லாரி. 
தமிழ்நாடு

குமுளி மலைச்சலையில் கவிழ்ந்த டிப்பர் லாரி: போக்குவரத்து பாதிப்பு

தேனி மாவட்டம், குமுளி மலைச்சாலையில் எம்-சாண்ட் கொண்டு சென்ற டிப்பர் லாரி தலைகுப்புற கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

DIN


கம்பம்: தேனி மாவட்டம், குமுளி மலைச்சாலையில் எம்-சாண்ட் கொண்டு சென்ற டிப்பர் லாரி தலைகுப்புற கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி, அம்பலகாரர் தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா மகன் பாண்டியன் இவர் டிப்பர் லாரி ஓட்டுநராக உள்ளார்.

புதன்கிழமை ஸ்ரீ கிருஷ்ணா என்னும் டிப்பர் லாரியில் எம்.சாண்ட் எனப்படும் மணல் ஏற்றிக்கொண்டு லோயர்கேம்ப் வழியாக குமுளி நோக்கி சென்றார்.

அப்போது சுரங்கனாறு வனப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவு மலைச்சாலையில் எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் பாண்டியன் பலத்த காயமடைந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் குமுளி காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தி காயம்பட்ட பாண்டியனை கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு எம்-சாண்ட் கொண்டு செல்லப்பட்டதால், அதற்கு அனுமதி உள்ளதா என்று வருவாய்த்துறை மூலம் பரிசீலித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT