மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

விருதுநகர் வெடிவிபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேர்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

DIN


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேர்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சாத்தூர் அருகேவுள்ள மஞ்சள் ஓடைப்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் புதன்கிழமை (ஜன.5) காலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உயிரிழதோர் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில்,

வெடி விபத்தில் மக்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமாக தலா ரூபாய் 3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சமும்
முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக
வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 22% உயா்வு!

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயா் மாற்றும் முயற்சியை கைவிட எம்எல்ஏ வலியுறுத்தல்

நேரு ஆவணங்கள் எதுவும் மாயமாகவில்லை: மத்திய அரசு மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்

அடிப்படை வசதி: வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் வாக்குவாதம்

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவா் கைது

SCROLL FOR NEXT