தமிழ்நாடு

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு? முதல்வர் ஆலோசனை

DIN

தமிழகத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி புதிய கரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 10ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தொடர்ந்து தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் நேற்று முதல்கட்ட ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, கலைவாணர் அரங்கில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் புதன்கிழமை மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தக் கூட்டத்தில், பொங்கல் பண்டிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இரவுநேர ஊரடங்கு, வழிபாட்டுத் தலங்களில் வார இறுதி நாள்களில் தடை உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT