முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் கார் - வேன் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் பலி

காஞ்சிபுரம் அருகே மானாம்பதி பகுதியில் காரும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:02 AM
பகிர்:

காஞ்சிபுரம் அருகே மானாம்பதி பகுதியில் காரும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, அரியலூர் மாவட்டம் அரியலூரில் பணிபுரிந்து வருகிறார்.

சுந்தரமூர்த்தி அரியலூரில் உள்ள தனது நண்பர்கள் இருவருடன் நேற்று இரவு புறப்பட்டு பேரம்பாக்கம் செல்ல காஞ்சிபுரம் நோக்கி வந்துள்ளார்.

சுந்தரமூர்த்தியின் கார் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மானாம்பதி அருகே வரும்பொழுது, எதிரே மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு வந்த வேன் எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காரில் பயணம் செய்த சுந்தரமூர்த்தி, அவரின் நண்பர் ராஜா, மற்றுமொரு நண்பர் என மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து பெருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பெருநகர் போலீசார் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →