தமிழ்நாடு

கூட்டுறவு சங்க மசோதா தாக்கல்: பதவிக்காலம் 3 ஆண்டுகளாக குறைப்பு

DIN

தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்க சட்டத் திருத்த மசோதாவை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

கடந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைக்கேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று 110 விதியின் கீழ் கூட்டுறவு சங்க சட்டத் திருத்த மசோதாவை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார்.

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இந்த புதிய சட்டத் திருத்தத்தில், கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான பதவிக் காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிமுக ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT