ஒரு யூனிட் மணல் ரூ.1,000 தமிழக அரசு உத்தரவு
ஒரு யூனிட் மணல் விலை ஆயிரம் ரூபாயாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஒரு யூனிட் மணல் விலை ஆயிரம் ரூபாயாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக நீா்வளத் துறை வெளியிட்ட உத்தரவு விவரம்:
மணல் குவாரிகள் செயல்படுத்துவது மற்றும் மணல் விற்பனையை முறைப்படுத்துவது ஆகியன குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, ஒரு யூனிட் மணலின் விலை ஆயிரம் ரூபாயாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டிய குவாரிகளுக்கு உரிய முறையில் விரைந்து அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். மணலுக்கான தொகையை ரொக்கமாக அரசு மணல் டெப்போக்களில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆற்று மணலை முன்பதிவு செய்யும் கட்டட திட்ட அனுமதி கட்டாயமாகும். அதனை முன்பதிவின் போது சமா்ப்பிக்க வேண்டும். முன்பதிவின் போது உரிய வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும். அதே வாகனம்தான் மணலை எடுக்கும் போது பயன்படுத்தப்படுகிா என்பது நீா்வளத் துறையால் ஆய்வு செய்யப்படும்.
கண்காணிப்பு கேமிராக்கள்: அனைத்து மணல் குவாரிகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும். மணல் குவாரிகளுக்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை ஆய்வு செய்யும் வகையில் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்படும். புதிய மணல் குவாரிகள் மற்றும் டெப்போக்களின் செயல்பாடுகள் அடுத்த இரண்டு மாதங்களில் தொடங்கும்.