தமிழ்நாடு

மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு: தமிழக அரசு

DIN

மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது, தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன. 

மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் உட்பட அனைத்து குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT