சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து நடவடிக்கை: நீட் கூட்டத்தில் தீர்மானம்
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூத்த சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூத்த சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நிறைவடைந்தது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:
"அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சரிடம் நாம் ஏற்கெனவே அளித்த கோரிக்கையை பரிசீலிக்க, அவரிடமிருந்து அழைப்பு வந்தால், அனைத்துக் கட்சிகளின் சார்பில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதையும் படிக்க | நீட்: அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்து பாஜக வெளிநடப்பு
நாமும், நமது மாநிலமும் இன்று அடைந்துள்ள இந்த வளர்ச்சியை சமூக நீதிக்கான அரசியல், சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே பெற்றுள்ளோம் என்பதன் அடிப்படையில், நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட சட்டரீதியாக தேவையான நடவடிக்கைகளை மூத்த சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்தப் பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவையிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்வது எனவும், நீட் தேர்வு பாதகங்களை நாட்டின் மற்ற மாநிலங்களும் உணரும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது."