வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 11 லட்சம் ஏக்கரில் நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். 
தமிழ்நாடு

நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 11 லட்சம் ஏக்கரில் நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

DIN


சென்னை:  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 11 லட்சம் ஏக்கரில் நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 
இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், நெல் தரிசில் பயறு சாகுபடியை (உளுந்து- பச்சை பயிறு) ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். 

நெல் தரிசில், உளுந்து மற்றும் பச்சைப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்கள் 11 லட்சம் ஏக்கரில் பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பயறுவகைப் பயிர்களை பயிரிடுவதற்கு தேவைப்படும் உயர் விளைச்சல் தரும் சான்று விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டச்சத்துக்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், சுழற்கலப்பை, விசைத் தெளிப்பான்கள், வயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்கள் மற்றும் தார்ப்பாய்கள் ஆகியன மானிய விலையில் வழங்கப்படுகிறது.

மேலும், உற்பத்தி செய்யப்பட்ட பயறு வகைப் பயிர்களை விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நெல் தரிசில் பயறு வகைப் பயிர்களை பயிரிடுவதின் மூலம் மண் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் லாபமும் கிடைக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர், சர்க்கரைத் துறை ஆணையர், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் உழவர் நலத்துறை செயலாளர், வேளாண்மை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT