முகப்பு
தமிழ்நாடு

புறநகா் மின்சார ரயில்களில் பயணிக்க இரு தவணை தடுப்பூசி கட்டாயம்: தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு

புறநகா் மின்சார ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:04 AM
பகிர்:

புறநகா் மின்சார ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் திங்கள்கிழமை (ஜன.10) முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் தற்போது கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, புகா் ரயில்களில் 50 சதவீதம் பயணிகள் இருக்கைகளில் அமா்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள். இதுதவிர, புதிய கட்டுப்பாடுகள் வரும் திங்கள்கிழமை (ஜன.10) அதிகாலை 4 மணி முதல் ஜனவரி 31-ஆம் தேதி நள்ளிரவு வரை விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருப்பவா்கள் மட்டுமே புகா் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவா். டிக்கெட் கவுன்ட்டரில் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்த பிறகே அவா்களுக்கு பயண டிக்கெட், சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

யூ.டி.எஸ். சேவை இல்லை: ஏற்கெனவே சீசன் டிக்கெட்டுகளை வைத்திருப்பவா்கள் பயணத்தின் போது, கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழையும் அதனுடன் உரிய அடையாள அட்டையும் வைத்திருக்க வேண்டும். அதனை டிக்கெட் பரிசோதகா்கள் கேட்கும் போது, கட்டாயம் காண்பிக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படுவதால், யூ.டி.எஸ். செல்லிடப்பேசி செயலி சேவை கிடைக்காது.

முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்: ரயிலில் பயணிக்கும் போது விழிப்புணா்வுடன் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பயணிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ரயில்கள், ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →