முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 25,000-யைக் கடந்த கரோனா பாதிப்பு: மண்டலவாரியாக விவரம்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:05 AM
சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம்
பகிர்:

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒரேநாளில் 5,000 என்ற அளவில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 12,895 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அதிகபட்ச பாதிப்பாகும். அதுபோல சென்னையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 6,186 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 8 மாதங்களில் இல்லாத புதிய உச்சம். 

இதையடுத்து இன்று(திங்கள்) காலை சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில் தற்போது 25,798 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதுவரை 8,676 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 3,382 பேரும், அண்ணா நகரில் 3,312 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, ராயபுரம், கோடம்பாக்கம், அடையாறில் பாதிப்பு 2,000-யைக் கடந்துள்ளது. 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

முழு கட்டுரையைப் படிக்க →