சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழா 
தமிழ்நாடு

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழா

சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்கிரம நாராயணப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 

DIN


சீர்காழி: சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்கிரம நாராயணப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 

கோவில் மூலவர் உலகளந்த பெருமாள் என்றழைக்கப்படுகிறார். இக்கோயிலில் கூடாரவல்லி விழா நடைபெற்றது. பெருமாள் சன்னதியில் லோகநாயகி தாயார், பெருமாள், ஆண்டாள் ஆகிய சுவாமிகள் ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 

முன்னதாக தாயார், பெருமாள், ஆண்டாள் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், செய்விக்கப்பட்டு, சாத்துமுறை மலர்கள் , ஆபரணங்கள் கொண்டு அலங்காரம்  தீபாராதனை காட்டப்பட்டது. சமூகக் இடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை பட்டாச்சாரியார்கள் பத்திநாதன், பிரபு செய்திருந்தனர். ஏற்பாடுகளை பரம்பரை ஆதீனம் கேகேசி சீனுவாஸ் சுவாமிகள் செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT