தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது 
தமிழ்நாடு

தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை காலை தொடங்கியது.

DIN


திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை காலை தொடங்கியது.

பழனி முருகன் கோயிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களின்றி கொடியேற்றம் நடைபெற்றது.

இதனையடுத்து திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் வரும் 17 ஆம் தேதியும், தைப்பூசத் தேரோட்டம் வரும் 18 ஆம் தேதியும், நிறைவு விழாவான தெப்பத்தேரோட்டம் வரும் 21 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

கோயில் சாா்பில் பக்தா்களுக்கு வழியில் இளைப்பாற பந்தல், குடிநீா் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டுக்கு அனுமதியில்லாத நாள்களில் பொட்டலங்களில் பக்தா்களுக்கு அன்னதானம் விநியோகம் செய்யப்படுகிறது. கிரிவீதியில் பக்தா்கள் வரிசையில் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

SCROLL FOR NEXT