தலைஞாயிறில் பழைய பொருள்களை விற்று கிடைத்த வருமானத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு பொங்கல் பொருள்களை வழங்கிய செயல் அலுவலர் கு.குகன் உள்ளிட்டோர். 
தமிழ்நாடு

பழையன கழிந்த பொருள்களில் ஈட்டிய வருமானத்தில் பொங்கல் கொண்டாட்டம்

போகிப் பண்டிகையையொட்டி, பழையன கழிக்கப்பட்ட பொருள்களை தீயிட்டு எரிக்காமல் அவற்றை சேகரித்து விற்றதில் கிடைத்த வருமானம் தூய்மைப் பணியாளர்களின் பொங்கல் கொண்டாட்டத்துக்கு உதவியாக மாற்றப்பட்டது.

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், தலைஞாயிறு பேருராட்சி பகுதியில் போகிப் பண்டிகையையொட்டி, பழையன கழிக்கப்பட்ட பொருள்களை தீயிட்டு எரிக்காமல் அவற்றை சேகரித்து விற்றதில் கிடைத்த வருமானம் தூய்மைப் பணியாளர்களின் பொங்கல் கொண்டாட்டத்துக்கு உதவியாக மாற்றப்பட்டது.

தலைஞாயிறு பேரூராட்சியில் பழையன கழிதல் என பொதுமக்கள் மார்கழி மாதத்தில் வீட்டை சுத்தம் செய்து ஒதுக்கிய பொருள்களை தீயிட்டு எரித்துவிடாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடு வீடாக பழைய பொருள்களை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

அந்த பொருள்களை விற்பனை செய்து கிடைத்த வருமானத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு பொங்கல் கொண்டாட கரும்பு, வாழை, புதுப்பானை, இஞ்சி, மஞ்சள் கொத்துகள் வாங்கி இன்று வியாழக்கிழமை (ஜன.13) அளிக்கப்பட்டன.

திடக் கழிவு மேலாண்மையில் குப்பை என்பது தவறவிடப்பட்ட வளம் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக பேரூர் செயல் அலுவலர் கு.குகன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விளையாடித்தான் பாா்ப்போமே...

காரைக்காலில் கல்லறைத் திருநாள்

சமன்செய்து சீா்தூக்கும் கோல்!

கடத்தல் வழக்கில் இருவா் கைது

பிகார் தேர்தல்! காங்கிரஸை மிரட்டி முதல்வா் வேட்பாளரானாா் தேஜஸ்வி: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT