லோயர் கேம்பில் பென்னிகுயிக் பிறந்தநாளை முன்னிட்டு பென்னிகுயிக் முழு உயர வெண்கலச்சிலைக்கு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செலுத்தினர். 
தமிழ்நாடு

லோயர் கேம்பில் பென்னிகுயிக் பிறந்தநாள் விழா: பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு 

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் 181 ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை லோயர் கேம்ப் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

DIN


கம்பம்:  முல்லைச் சாரல் விவசாய சங்கம், பாரதிய கிசான் சங்கம் சார்பில் தை முதல் நாள் மற்றும் முல்லைப் பெரியாறு அணை கட்டிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் 181 ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை லோயர் கேம்ப் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

பாரதிய கிசான் சங்கத் தலைவர் டாக்டர் சதீஷ் பாபு தலைமையில், முல்லைச் சாரல் விவசாய சங்க செயலாளர் ஜெகன் முன்னிலை வகித்தார்.

மணி மண்டபம் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடுகள் நடத்தி, பென்னிகுயிக் முழு உயர வெண்கலச்சிலைக்கு பொங்கல் படைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் பாரதிய கிசான் சங்க துணைத்தலைவர் கொடிய அரசன், முல்லைச் சாரல் விவசாய சங்க பொருளாளர் ஜெயபால். ராஜா, 18 ஆம் கால்வாய் சங்க தலைவர் பி.ராமராஜ். பீர் பாபு உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT