தமிழ்நாடு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் பொங்கல் வழிபாடு

DIN

நீடாமங்கலம்: நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் பொங்கல் விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இக்கோயில் திருஞானசம்மந்தரால் தேவாரம் பாடப்பெற்ற சிறப்புடையது.
நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகாரதலம்.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் பொங்கல் திருநாள் வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிகாலையில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக , ஆராதனைகள், அலங்காரம் நடந்தது.

சூரிய பகவானுக்கு பகல் 12 மணியளவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, செங்கரும்பு, சர்க்கரை பொங்கல் படைத்து நிவேதனம் செய்தனர். மகாதீபாராதனையும்  காட்டப்பட்டது. தமிழக அரசின் கரோனா வழிகாட்டல்படி பூஜைகள் நடந்தது.

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் பொங்கல் வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சூரிய பகவான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT