முகப்பு
தமிழ்நாடு

சாலை இடும் பணிகளைச் செய்வோருக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னையில் சாலை இடும் பணிகளை செய்து வருவோருக்கும் அதிகாரிகளுக்கும் மிக முக்கிய அறிவுறுத்தலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
சாலை இடும் பணிகளைச் செய்வோருக்கு முதல்வர் அறிவுறுத்தல்
பகிர்:

சென்னை: சென்னையில் சாலை இடும் பணிகளை செய்து வருவோருக்கும் அதிகாரிகளுக்கும் மிக முக்கிய அறிவுறுத்தலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, சென்னையில் சாலை இடப்படும் பணிகளை இரவில் நேரில் ஆய்வு செய்து மில்லிங் செய்யாமல் சாலை போடக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார்.

அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை இடும் பணிகளை மேற்கொள்ளும்படி மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.