ஸ்ரீவில்லிபுத்தூரில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி:  ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர்கள் 
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி:  ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பொங்கல் திருவிழாவையொட்டி, இளவட்டக்கல் தூக்கும் போட்டி பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பொங்கல் திருவிழாவையொட்டி, இளவட்டக்கல் தூக்கும் போட்டி பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழா முடிந்த மறுநாள் மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் இந்து நாடார் உறவின் முறை  பள்ளி மைதானத்தில் இந்த இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெறும். சமுதாய நல்லிணக்க பேரவை மற்றும் சேவாபாரதி சார்பில் நடைபெறும் இந்த போட்டி சனிக்கிழமை காலை தொடங்கியது.

இந்த விழாவிற்கு நாடார் மகாஜன சங்க துணைத் தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். சமுதாய நல்லிணக்க பேரவையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் சிவலிங்கம், தங்கராஜ், சங்கரலிங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 18 வயதுக்கு மேற்பட்ட இந்த இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் அறுபத்தி எட்டு கிலோவில் இருந்து சுமார் 88 கிலோ வரை இளவட்ட கற்கள் வைக்கப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000 மதிப்புள்ள பரிசு பொருளும், இரண்டாம் பரிசு ரூ. 4000 மதிப்புள்ள பரிசு பொருளும், மூன்றாம் பரிசு ரூ.3000 மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.  கலந்துகொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசம், வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீர்த்தி பாண்டியனின் அஃகேனம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருப்பதி கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய பெங்களூர் பக்தர்!

சுதந்திர நாளையொட்டி இந்தியக் கடற்படை சார்பில் புதுச்சேரியில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!

SCROLL FOR NEXT