பாலமேடு ஜல்லிக்கட்டு: அடங்காத காளைகள்; 20-க்கும் மேற்பட்டோர் காயம்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. 4 ஆவது சுற்று முடிவில் 395 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. 4 ஆவது சுற்று முடிவில் 395 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களுக்கு அடங்காத காளையின் உரிமையாளர்களுக்கும் தங்ககாசுகள், பட்டுபுடவைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
இதனிடையே அனுமதி பெறாமல் 10 காளைகளை ஜல்லிக்கட்டு வரிசையில் நுழைக்க முயன்றபோது காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது காவலர்கள் சிறிய அளவில் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
Advertisement
Advertisement
20 பேர் காயம்
மூன்றாவது சுற்று முடிவில் 10 வீரர்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
2 ஆயிரம் காவலர்கள்
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் பாதுகாப்பு பணியில் மதுரை சரகத்தைச் சேர்ந்த 6 மாவட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.